Saturday, October 7, 2017

சட்டம் - அரசாங்கம் : அடிப்படைகள்

"சட்டம்" :         குடிமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அடிப்படை விஷயம். அரசாங்கம்  நமக்கான சட்டத்தை இயற்றுகிறது, பொதுமக்களாகிய நமக்கு அது தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நமக்கு தெரிந்திருக்கிறதா? இல்லை,  ஏனென்றால்  சட்டம் நமக்கு வந்து சேர்வதற்கான வழி முறைகள்  சரிவர இல்லை, அப்படியே வந்தாலும் அதை புரிந்துகொள்வது சாதாரண மக்களுக்கு மிகவும் சிரமம். படித்தவர்களுக்கும் கூட அது பெரிய சங்கதியாய்த் தெரிகிறது. சட்டத்திலும், அரசிலும் புழங்கப்படும் வார்த்தைகள் நமது மொழியிலும்,  எளிய விளக்கங்களுடனும் இருந்தால் அது நமக்கு பயனுள்ளதாய் அமையும். 

சட்டம் எனக்குத் தெரியாது அல்லது புரியாது என்ற அறியாமையை, சட்டம் மன்னிப்பதிலை. பெரும்பாலும் ஆங்கிலதிலேயே இருக்கும்  சட்டம்  நமக்குப் புரியவில்லையென்றாலும் அது நம் குற்றமே.  எனவே நமது அன்றாட வாழ்விற்க்கும், நமக்கான அரசாங்கத்தை அமைப்பதற்க்கும் இவையெல்லாம் அவசியமே. இந்த தொடரில் நாம் சட்டம் சார்ந்த சொற்களுக்கு  எளிய விளக்கங்களைக் காணலாம்.. 

சட்டம் (Law) என்றால் என்ன ? 

            "ஒரு நாட்டின் எல்லைக்குள் (அல்லது) ஒரு அரசின் எல்லைக்குள் வாழும் மக்களுக்கு ஒழுக்க விதிகளையும், நெறிமுறைகளையும் குறிப்பதே சட்டம்" ஆகும். இதற்கு பல விளக்கங்கள் இருந்தாலும் மேற்ச்‌சொன்னவற்றையே நாம் எடுத்துக் கொள்ளலாம்.  ஒழுக்க விதிகளையும், நெறிமுறைகளையும் மீறும் மக்களுக்குத் தண்டனை அச்சட்டத்தின்படியே  கொடுக்கப்படும்.

சட்டம் எங்கிருந்து வருகிறது?   

     நம் நாட்டில் 'சட்டமன்றம்' மற்றும்  'நாடாளுமன்றம்'  இருப்பது உங்களுக்குத் தெரியும், அவைதான் சட்டம் இயற்றப்பட்டும் மையங்கள். இங்கு தான் சட்டம் உருவாக்கப்பட்டு, மெருகேற்றப்பட்டு நமக்கு அளிக்கப்டுகிறது. அந்த சட்டத்தில், திருத்தங்கள் இருந்தாலும் அந்த அவைகளிலேயே தான் செய்யவேண்டும்.

சட்டமன்றத்தில் (State Legislative Assembly) அந்தந்த மாநிலங்களுக்குத் தேவையான சட்டங்கள் இயற்றப்படும்.

நாடாளுமன்றத்தில் (Parliament) நாடு முழுமைக்குமான சட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.

சட்டமன்றமும், நாடாளுமன்றமும் “சட்டம் இயற்றும் குழுக்கள்” என தமிழிலும் “Legislatures” என ஆங்கிலத்திலும் அழைக்கபப்டுகிறது. 


No comments:

Post a Comment